நான்கு வர்ணம் ( பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரன் ) என்பது நான்கு விதமான தரம் (Four Qualities of Human Beings), இவை நான்கும் ஜாதியையோ அல்லது குலத்தையோ குறிப்பது அல்ல.

வர்ண பிரிவு ஏன்? நம்மை நாம் உணர்ந்துகொள்ள, நம் தகுதியை உயர்த்திகொள்ள உதவும் அளவுகோல் அவ்வளவே. மனிதர்களின் செயல்கள் மற்றும் குணாதிசையங்களை வைத்து அவர்களை நான்கு பிரிவுகளாக தரம் பிரித்திருக்கிறார்கள், உலக மக்கள்அனைவரும், ஆணோ, பெண்ணோ இந்த நான்கு தரத்தில்ஏதோ ஒன்றின் கீழ் இருப்பர், ஐந்தாவதாக ஒன்று இல்லை, நம்மில் பலரும் இதை தவறாக புரிந்துகொன்டு நான்கு ஜாதியாகவோ அல்லது குலமாகவோ நினைக்கின்றோம் அல்லது கற்பிக்கபட்டிருக்கிறோம், பகவத் கீதையில் கண்ணன் ‘நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் – இயல்பின் அடிப்படையில்’ என்கிறான் பிறப்பின் அடிப்படையில் அல்ல, பிறப்பால் அனைவரும் சூத்திரர்கள் தான், வேதம் (தர்மம்) கற்காத வரை ஒருவன சூத்திரனாகவே கருதபடுகிறான், எவரிடம் வேதம் கூறும் உத்தம குணங்கள் இருக்கின்றனவோ அவரே பிராமணன் என்கிறது தர்மம், பிறப்பால்  ஒருவன் பிராமணனாகவோ, சத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரன்னாகவோ ஆகிவிட முடியாது, ஒருவனது செயலினால் அவன் பிராமணனாகவோ, சத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரன்னாகவோ அறியபடுகிறான்.


நான்கு வர்ணத்தின் தன்மைகள்  (4 type of attitude)

பிராமணன் – உத்தமமானவன்  ( உலகத்தோர் நன்மையில் நித்திய அக்கரை உள்ளவன்) leaders.

சத்திரியன் – தீரம் மிக்கவன் ( மக்களை ஆட்சி செய்து வழி நடத்துபவன்) Administrators 

வைசியன் – பொருளாதார நிபுணன் ( வியாபாரம் அல்லது  பொருள் தயாரிப்பில் திரன்மிக்கவன்) Businessmen

சூத்திரன் – செயல் வீரன்  ( எத்துறையிலும் இருப்பர், இவர்களுக்கு எப்பொழுதும் தங்களை வழி நடத்த   தலைவன் தேவை ) Executers

 

Tamil Source: http://mahabharatham.arasan.info/2014/06/Mahabharatha-Vanaparva-Section180.html

English Source: http://sacred-texts.com/hin/m03/m03180.htm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Dharmam.in. All rights reserved
Web Design : NIKITHA