தர்மம் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது …

குரு வேத வியாசர் அவர்களுக்கு வணக்கம்

குரு கோபால் ஜி அவர்களுக்கு வணக்கம், 

குரு வேலுகுடி கிருஷ்னன் அவர்களுக்கு வணக்கம்,

குரு சோ ராமசாமி அவர்களுக்கு வணக்கம்

 

தர்மம் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது …மஹாபாரதத்தில் உள்ள தர்மசாத்திரங்களை ஆராயும் முயற்ச்சி.

 

* மஹாபாரதத்தின் தார்பரிய விளக்கங்கள் 

*மஹாபாரதம் சொல்லும் தர்மங்கள்

*மஹாபாரதம் கதாபாதிரங்களின் பெயர் ஆராய்ச்சி

* மஹாபாரதம் பற்றிய கேள்வி பதில்கள்

 

 

3 thoughts on “தர்மம் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது …

 1. Chandrasekar

  எனக்கு தெரிந்து சில வருடங்களாகவே, என் அன்பு நண்பர் ADS சிவகுமார் ஹிந்துமத மேன்மயையும், இதிஹாச தத்துவங்களை பற்றியும், தெளிவாக சமுதாயத்திற்கு பரப்ப வேண்டும் என்று சொல்லிகொண்டிருப்பார். பல வேத விற்பன்னர்களின் சொற்பொழிவுகள் வாயிலாகவும், ஆய்வாளர்களின் உரைகளிளிருந்தும், மூத்த எழுத்தாளர்களின் நூல் விளக்கங்களையும், கேட்டறிந்தவற்றையும் சரியான முறையில் குழப்பமின்றி வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பார். இக்காலத்தில் சொர்போழிவையோ, புத்தகம் வாசிப்பதையோ அதிகம் விரும்பாத இளைய சமுதாய மக்கள்தான் அதிகம் உள்ளனர். சிவகுமார் இதைப்பற்றி என்னிடம் சொல்லி குறைபட்டுள்ளார். இதற்கு காரணங்கள் பலவுண்டு: இப்போ என்ன அவசரம் இத பத்தி தெரிஞ்சிக்க? இத படிச்சி தெரிஞ்சி சாமியாரா போகபோரியா? அப்படி என்ன வயசாச்சு ? இருக்கற படிப்ப முடிச்சி வேலைக்கு போவதப் பாரு… என்று சுற்றம் சூழ அறிவுரைகளும் ஏச்சும் நிறைய வந்து இளையவர்களை தாக்கும். குடும்பத்தில் இதை போதிக்க தொடங்கினால் அதனோடே அவர்கள் பயணிப்பர். தர்ம நெறிகள் தவறாமல் அன்றாட செயல்களில் அவர்களை நன்னெறிகள் காத்து நிற்கும். இன்று பெரியவர்களுக்கே விஷயம் தெரியாதபோது இளையவர்களை என்ன சொல்வது..? மதம் பற்றிய மேன்மையை தெரிந்துகொள்ள அனுமதியில்லையே என ஏங்குபவர்களும் நிறைய உண்டு. அடுத்த தலைமுறைக்கு உதவும் மின்னணு அணுகுமுறைதான் இவர்களுக்கு வரப்பிரசாதம். எப்போது வேண்டுமானாலும் என்ன தலைப்பை அடித்தாலும் விடை கிடைக்கும் வகையில் வடிவமைத்துள்ளார். மகாபாரதத்திற்கு இணையான ஒரு பிரமாண்ட திட்டம்தான் இது. இந்து மகாசமுத்ரத்தில் முதல் காலடி எடுத்து வைத்துள்ளார். காலபோக்கில் அவ்வப்போது புதிய பக்கங்களை சேர்த்துக்கொண்டு வரவேண்டும் என்பார். இதற்கு முடிவில்லை, இணையம் உள்ளவரை என்றுமே ஒரு குடைகீழ் தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கும். 'என்னால் முடிந்த வரை இதை செய்ய முயற்சிப்பேன்' என்றவர், சொன்னபடி செயலிலும் காட்டிவிட்டார். இந்து மதம் பற்றிய உயர்ந்த சிந்தனையும், சமூக பங்களிப்பு சேவையும், ஞானவொளி பரப்பவேண்டும் என்று தன்னலமில்லா தெளிவான நோக்கில் இந்த இணையதளத்தை நிறுவியுள்ளார். "தர்மோ ரக்க்ஷதி ரக்க்ஷிதஹ" என்றால் "நாம் தர்மத்தை காத்தால், அது நம்மை காக்கும்' என்பது பொருள். dharmam.inஎன்ற பிரம்மாண்ட பரிமாணமுள்ள இணையத்தளம் மூலம் திரு சிவகுமார் தர்ம சம்ரக்ஷனை செய்துவருகிறார். அவருக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டு.

  Reply
 2. ஸ்ரீனிவாசன்

  மிகவும் நல்ல சேவை. வாழ்த்துக்கள். முக்கியமாக அந்தணர் அல்லாத ஹிந்துக்களிடையே தாங்களும் ஹிந்து தான் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். ஹிந்து தர்மத்தின் மேன்மையை அவர்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அப்போது தான் நம் மதத்தின் மேல் அவர்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்படும். ஸநாதன தர்மத்தின் வரையறைக்குள் தான் தாங்களும் இருக்கிறோம் என்ற உணர்வு அணைத்து தரப்பு மக்களிடம் வளர வேண்டும்.

  Reply
  1. Sivakumar Post author

   நன்றி நன்பரே, தங்கள் ஆதரவு தொடர வேண்டும், நன்பர்களிடம் இவ்வலைதளத்தை பகிருங்கள்,

   தங்களுக்க்கு தெரிந்த இவ்வலைதளங்களை இங்கே பகிருங்கள்

   http://www.dharmam.in/

   https://www.facebook.com/pages/Dharmam/238190356371564?ref=hl

   Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 Dharmam.in. All rights reserved
Web Design : NIKITHA