சமஸ்கிருதத்தை பாதுகாக்க சமஸ்கிருதத்தில் பேச வேண்டும் என்று வலியுறுத்துகிறார்களே அதை பற்றிய உங்கள் கருத்து ?

சம்ஸ்கிருதத்தில் பேசுவது சமஸ்கிருதத்தை பாதுகாக்கும் என்பதை ஏற்று கொள்ள முடியாது . சமஸ்கிருதம் வேதத்தை பாதுகாப்பதற்கே தோன்றிய மொழி. சமஸ்கிருதம் சில இடங்களில் பேச்சு வழக்கில் வந்ததால்தான் பல இடைசொறுகள்கள் வருவதற்கு காரணம் ஆனது . ஆதியில் சமஸ்கிருதம் பேசும் வழக்கில் இல்லை. பேச்சு வழக்கில் வந்த எந்த மொழியும் ஒலி மாற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது . இதுவே மொழிகளின் பொதுவான விதி . யோசித்து பார்க்க வேண்டும் . சிறு ஒலி மாறினாலும் சமஸ்கிருதத்தில் பல அர்த்தங்கள் மாறிவிடும் . ஒரு வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் சிறு ஒலி மாற்றத்தால் பற்பல அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகள் பல உண்டு. சமஸ்கிருதத்தை வேதம் மற்றும் இதிகாசங்கள் படிப்பதற்கும் எழுதுவதற்கும் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவதுதான் வேதத்தின் மூல கரு மாறாமல் பாதுகாப்பதற்கான வழி. சென்னையில் மீனாட்சி கல்லூரியில் நடந்த சமஸ்கிருத விழா ஒன்றில் சமஸ்கிருத நிபுணர், நாம் அன்றாடம் சமஸ்கிருதத்தில் பேசி பழக வேண்டும் என்று பேசினார், கற்பனை செய்து பாருங்கள். பேச்சு வழக்கில் தமிழ் மொழியில் நாம் எத்தனை வார்த்தைகளை தவறாக உபயோகிக்குறோம். தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் தர்மத்தின் அடிப்படையில் உருவான மொழி . சிறு உதாரணம் “நாசமற்று போனவனே (நாசமத்து போனவனே) ” என்கின்ற தமிழ் வார்த்தை ஒன்று உண்டு . உலகில் எந்த மொழியிலும் இல்லாத ஓர் அபூர்வமான வார்த்தை. ஆதி தமிழர்கள் தங்கள் குழந்தைகளை சிறுசிறு தவறுகளுக்காக “திட்டுவதற்கு ” உபயோகித்த வார்த்தை. உலகிலேயே திட்டுவதற்கு “வாழ்த்துகின்ற ” ஓர் வார்த்தையை உபயோகிக்கும் ஒரே மொழி தமிழ்தான். இந்த ஒரு வார்த்தை மற்றும் அல்ல. என் சிற்றறிவுக்கு எட்டியவரை மேலும் சில வார்த்தைகளை கண்டறிந்தேன். மேற்கூறிய “நாசமற்று போனவனே ” என்கின்ற வார்த்தையை நம் இப்பொழுது எப்படி உபயோகிக்கிறோம் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. அதைபோல் மற்றொரு வார்த்தை “எக்கேடும் கெடும் போடா” .இந்த தொன்மையான வார்த்தை “வரம்” ஆகும், நாம் அதை “சாபமிட” உபயோகிக்கிறோம். ஒரு தவறான வார்த்தையை மிக சகஜமாக நாம் உபயோகித்து கொண்டிருக்கும் பழக்கமும் நம்மிடையே உண்டு . அதில் ஒன்று “பால் மாறாதே ” என்பது ஒரு ஆணையோ பெண்ணையோ மிக மோசமாக திட்டுவதற்கு பயன்படுத்தும் வார்த்தை. அதை நாம் எப்படி உபயோகிக்குறோம் என்பது உங்களுக்கு தெரியும் .நான் இருகரம் கூப்பி கேட்டு கொள்வது என்னவென்றால் தெய்வ மொழியாம் சமஸ்கிருதத்தை படித்து எழுதி ஆராய்ச்சி செய்து ஒலி மாறாமல் காப்போம்.

“தெய்வமொழியாம் சமஸ்கிருதம் வேதத்தை
பாதுகாக்க மட்டுமே தோன்றிய மொழி ,
செம்மொழியாம் தமிழ்மொழி தர்மத்தோடு
கூடிய பேச்சு வழக்குமொழி ,தமிழை ஒரு
கண்ணாகவும் சமஸ்கிருதத்தை மறு
கண்ணாகவும் போற்றி பாதுகாப்போம்”.

மஹாபாரதத்தில் பிறப்பால் ஒருவன் பிராமனனாகவோ, சத்ரியனாகவோ, வைசியனாகவோ ஆகிவிட முடியாது என்று வருகிரது, ஆக பிராமன குலம், சத்திரிய, வைசிய குலம் என்று ஒன்று இருக்கின்றது என்றுதானே அர்த்தம்?

பிறப்பால் ஒருவன் பிராமனன் ஆகிவிட முடியாது என்றால், பிராமனன் மகன் என்பதால் அவன் பிராமனன் ஆகிவிட முடியாது, சத்திரியனின் மகன் என்பதால் அவன் சத்திரியனாகிவிட முடியாது என்று தான் விளக்கம் கொள்ளவேண்டும், இதற்க்கும் மஹாபாரதத்தில் பல உதாரணங்களை முன்வைக்க முடியும், பாண்டுவின் அண்னன் திருதிராக்ஷ்ட்டிரன் சத்திரியன் இல்லை, மூத்தவராக இருந்தும் மன்னர் பதவி மறுக்கபட்டது, இதற்கு பலரது மேலாட்டமான விளக்கம் அவர் ஊனமானவர், பார்வையற்றவர் என்பதாகும், தார்பரிய விளக்க படி அவர் மனதளவில் ஊனமானவர், சத்ரியர்களின் குணங்களில் ஒன்றான அனைவறையும் சமாக பார்க்கும் பார்வையற்றவர், சத்திரிய தகுதி மற்றும் திறமையால் அவர் மன்னர் பதவிக்கு வரவில்லை, நிற்பந்தத்தால் பதவிக்கு வந்தவர், ஆசையால் பதவியில் ஒட்டி கொண்டவர், அவரே சத்திரியன் குணம் அல்லாத ஒருவன் மன்னர் பதவி (தகுதி்க்கு பொருத்தம் இல்லாத பொறுப்பை ஏற்றல்) அடைந்தால் என்ன கதி அடைவான் என்பதறக்கு திருதிராக்ஷ்ட்டிரனே முக்கியமான உதாரணம், பந்த்ததில் கட்டுண்டவன் சத்திரியன் இல்லை, திருதிராக்ஷ்ட்டிரன் பந்த்ததில் கட்டுண்டவன் , மன அமைதியோடு அனைத்தையும் இழந்தான். அவர் மகன் துர்யோதனன் சத்ரியன், ஒரு சத்ரியனால் மற்றொரு சத்ரியனை கடடுபடுத்தவோ, வசபடுத்தவோ முடியும் இதிலும் தோற்றவர் திருதிராக்ஷ்ட்டிரன்.

மாதவிடாய் பற்றிய சில மூடநம்பிக்கைகள்

உலகத்திற்க்கு நாகரிகத்தை கற்று தந்த நமது இந்த தமிழ் சமுகத்தில் நடக்கும் மோசமான மூடநம்பிக்கைகளுள் இது ஆபத்தானது. இதை திறந்த இதயத்தோடு புரிந்துகொள்ள முயற்ச்சியுங்கள். நம் முன்னோற்கள் சொன்னதுதான் , நாம் எதுவும் புதிதாக சொல்லதேவையில்லை.

“மாதவிடாய், நாட்களில் பெண்களை ஒரு ராணியை பார்த்து கொள்வது போல் பணிவிடை செய்யவேண்டும் ” என்று தர்மசாஸ்திரம் சொல்கிறது, இந்த மூன்று நாட்கள் ஒய்வு, மீதம் இருக்கும் 27 நாட்கள் அவள் உழைப்புக்கு பலம் சேர்க்கிறது. அப்பரிபூர்ன ஒய்வால் மாதவிடாய்யும் காலம் தவறாமல் வருகிறது, இது பெண்களுக்கு மிக முக்கியமான ஆரோக்கியம், தனியக இருக்க வேண்டும், எதையும் செய்யகூடாது, என்பதேல்லாம் ஆரோக்கியம் மற்றும் முழு ஓய்வுக்காகத்தான், தீட்டு என்று அல்ல, இதை சரியாகய கடைபிடிக்க மறுத்த சிறுவயதினர் மற்றும் சில சமுதயத்திற்க்காக உருவக்கபட்ட சம்பரதாயங்கள். கொடூர மதி படைத்த சிலரால் சிதைக்கபட்டு சில மூடநம்பிக்கைகளை உருவாக்கிவிட்டது, சிறுமதி படைத்தவர்களால் இன்று பின்பற்றபடுகிறது.

நம் ஒவ்வொரு சம்பரதாயத்திற்க்கும் பின்னால் ஒர் அறிவியல் உண்மைகள் இருந்தாலும் நம் முன்னோற்கள் பெரும்பாலும் அதை விளக்கி கொண்டிருப்பதில்லை. அது அறிவியல் என்ற வார்த்தை தனியாக இல்லத காலம் மேலும் முத்தவர்கள் இளையவர்களுக்கு நல்லதையே சொல்வார்கள் என்று முழுமையாக நம்பிய சமுதாயம் அது.

நாம் இருக்கும் சமுதாயமோ தொலைகாட்சியில் வரும் விளம்பரம் ” அந்த மூன்று நாட்கள் சும்மவே இருக்க கூடாது அது மூடநம்பிக்கை ” என்று தேவையே இல்லாமல் எகிரி குதித்து, “இது என் சுதந்திரம் இந்த நிலமை மாறணும் ” என்று மாதவிடாய் இல்லாத சமயத்தில் காசுக்க ஒரு பெண் நடித்த விளம்பரத்தை நாகரிகமாக ஏற்க்கும் சமுதாயம், இந்த உலகத்தில் ஒரு பெண் சொல்லட்டும், மாதவிடாய் சமயத்தில் சுதந்திரம் என்று எகிரி, எகிரி குதிப்பது நல்லாயிருக்கும் என்று, இது போண்ற விளம்பரங்களால் இக்கால இளம் பெண்களின் மனநிலை பாதிக்கபடுகிறது., தொலைகாட்சியில் வரும் பெண் இப்படி குதிக்கிறாள் நம் உடம்பு மாதவிடாய் நாட்களில் அடித்து போட்டது போல் இருக்கிறதே , நம் உடம்புக்கு ஏதோ ஆகிவிட்டது என்று குழம்புகிறார்கள், பிறரிடம் கேட்பதற்கு தயங்குகிறர்கள். ஏன் என்றால் ஆண், பெண் உடலுறவு பற்றி பேசுவது அநாகரிகமாக என்னும் நாகரீக ஏமாளிகள் நிறைந்த சமுதாயம் இது.

மஞ்சள்நீர் ஊற்றும் சடங்கு எல்லாம் இப்ப அநாகரிகமாக படுகிரது,
ஒரு இளம் பெண்னை விவரம் அடைந்த பெண்ணாக குடும்பத்தினரிடையே அறிமுகம் செய்து, அப்பெண்ணை விவரம் அறிய வைப்பார்கள், சபையில் செய்யும் முதல் மரியாதை அது தான், இதனால் இளம் பெண் தன் பொறுப்பு, பெருமை, உரிமை அனைத்தையும் உணர்கிறாள், தன் பால் சார்ந்த விவரங்களை சங்கோஜம் இல்லாமல் கேட்டு தெரிந்து கொள்கிறாள், முன்னோற்களின் இது போன்ற இலைமறை காயாக சொல்லிய பாலியல் கல்வி முறையே சரியான பலன் அளிக்கும்.

கடவுள் என்பது என்ன?

கடவுள் என்கின்ற வார்த்தைக்கு விளக்கம் பல உள்ளது, இது பொருத்தமாக உள்ளதாக நான் நம்புகிறேன், கட என்றால் நகருதல், நெருங்குதல், செல்லுதல் இப்படி பல அர்த்தம் உள்ளது, உள் என்றால் உள்ளே, கடவுள் என்றால் நாம் நமக்குள்ளே சென்று ஆராய்வதாகும், தான் யார் என்று அறிந்தவன் இறைவனாகிறான், மனிதர்களில் பெரும்பான்மையினர் இந்த ஆராய்ச்சியை மறந்த பின்னால் உருவ வழிபாடு ஸ்தலங்கள் (கோவில்) தோன்றியது, தான் யார் என்று அறிந்தவனுக்கு ஆணவம் இருக்காது, கோபம் இருக்காது, பயம் இருக்காது, துக்கம் இருக்காது, பேராசை இருக்காது, எதிர்பார்ப்பு இருக்காது, போறாமை இருக்காது, அவனே கடவுள் ஆகிறான், ஆராயாத நமக்காக மகான்களும், சித்தர் பெருமக்களும் உருவ வழிபாடு ஸ்தலங்களை, நாம் நம் ஆன்மீக ஆராய்ச்சியை (தன்னை தான் உணருதல்) முழுவதுமாக விட்டுவிட கூடாது என்பதற்காக உருவாக்கியது தான். இப்பொழுது இருக்கும் சிறப்புமிக்க உருவ வழிபாடு ஸ்தலங்கள்

பின்னாளில் சில சுயநலவாதிகளாலும், தற்பெருமை பேசுபவர்களாளும், பேராசைகாரர்களாளும், வேதம் கற்காதவர்களாளும், ஆன்மிக போர்வையில் பல முடநம்பிக்கைகள் தோன்றின, அதே சுயநலவாதிகளும், தற்பெருமை பேசுபவர்களும், பேராசைகாரர்களும், வேதம் கற்காதவர்களும் தான் முதலில் இதை பின்பற்றினார்கள், பின்னர் பலர் அறியாமையால் (படிப்பறிவு இல்லாததால்) இந்த முடநம்பிக்கைகளை அதிக அளவில் பின்பற்ற துவங்கிவிட்டனர், ஆன்மீகம் என்றால் என்ன ? கேட்டு பாருங்கள், பெரும்பாலும் "ஆன்மீகம் என்றால் கோவில், பக்தி, விரதம், பூஜை, யாத்திரை, பிரசாதம், சம்பரதாயம், உற்ச்சவம், மந்திரம், பண்டிகை, தானம், புண்ணியம், இவையே பெரும்பாலாணோரின் பதிலாக இருக்கும், இவை ஆன்மீகத்தின் முதல் படிகளாகும், இங்கு இருப்பதையே நாம் பெரும் சுகமாக நினைக்கிறோம், அங்கேயே தேங்கிவிடுகிறோம்

அப்படி என்றால் ஆன்மீகம் என்பது நம்மால் எட்டமுடியாதது என்று அர்த்தமில்லை, வேதத்தில் இருக்கும் தர்ம நெறிகளை பின்பற்றினாலே ஆன்மீகத்தில் உயர் நிலை அடையலாம், தயவு கூர்ந்து நன்றாக புரிந்துகொள்ளவேண்டும், வேத தர்ம நெறிகளை பின்பற்றுவது என்றால் சன்யாசம் போதல் என்று அர்த்தம் அல்ல,, அல்ல,,அல்ல, தர்மபடி சரியாக வாழ்தல் என்று அர்த்தம், சாி வேதம் எங்கு போய் நாம் படிப்பது?, நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? குருவை எப்படி அறிந்து கொள்வது ? இவை அனைத்தும் சாத்தியம், இது சத்தியம். உண்மையில் ஒருவனுக்கு வேதம் கற்பதில் உத்வேகம் வந்தால் வாய்ப்பும் உடன் வரும் இது சத்தியம். மேலும் குரு வேதவியாசர் நமக்கு நான்கு வேதத்தின் மொத்த சாராம்சத்தையும் எளிய நடையில் மஹாபாரதத்தில் கதை வடிவிலும், கதாபத்திரத்தின் உரையாடல்களின் வாயிலாகவும் மனித சமுதாயத்திற்க்கு என்றைக்கும் பொருந்தும் தர்ம நெறிமுறைகளை விளக்கியுள்ளார், இதில் பத்து சதவிகிதம் புரிந்து கொண்டாளே ஆன்மீகத்தில் உயர் நிலை அடைவோம் என்பது உறுதி

 மஹாபாரதம் என்பது, 1,25,000 க்கும் மேற்பட்ட ஸ்லோகங்களை கொண்டது, பலர் மஹாபாரதத்தை வெறும் கதை போல் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள் என்னை பொறுத்தவரை இவைகள் சத்தான பழத்தின் சாறு நீக்கபட்ட சக்கைகள் ஆகும். குரு வேத வியாசர் எழுதிய மஹாபாரதத்தில் ஒரு எழுத்தை கூட விட்டுவிட்டு மொழிபெயர்க்கும் உரிமை மனிதர்களாகிய நமக்கு இல்லை. ஒரு எழுத்தை கூட விட்டுவிடாமல் படிப்போம். நம்மை நாம் உணர்வோம்.

தமிழில் முழு மஹாபாரதம்

தமிழில் முழு மஹாபாரதம், இது சாதாரண முயற்சி அல்ல, குரு வேத வியாசர் அருள் இருப்பதால்தான் குரு செ.அருட்செல்வப் பேரரசன் அவர்களால் இப்பெரும் நற்பணி துவங்க முடிந்தது, இதுவரை  நேரடியாக சமஸ்கிருதத்திலிருந்து ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரத்திற்க்கும்  மேற்பட்ட  ஸ்லோகங்கள் கொண்ட முழு மஹாபாரதம் (பதினெட்டு பர்வங்களும்)  நான் அறிந்தவரை இரு வேறு ஆசிரியர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளிவந்துள்ளது, அவை  மஹாபாரத கும்பகோணப்பதிப்பு, குரு. ம. வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, தொகுக்கப்பட்டது, மற்றொன்று 18ஆம் நூற்றாண்டின் நல்லபிள்ளை பாரதம். இவை இரண்டும் புத்தகமாகவே கிடைக்கின்றன, தற்போது மூன்றாவதாக குரு செ.அருட்செல்வப் பேரரசனின் இப்பெரும் நன்முயற்சியால் உல தமிழ் மக்கள் யாவரும் படித்து பயன் பெறும் வகையில் முதன் முறையாக இலவசமாக தமிழில் முழு மஹாபாரதத்தை அவா் இணையதளத்தில் முதல் மூன்று பர்வங்களை வெளியிட்டிருக்கிறார். ஆராய்ந்து படித்து பயன் பெறுவோம் Link : http://mahabharatham.arasan.info/

வில்லிபுத்துராரை நான் இங்கு குறிப்பிடாததற்கு காரணம் அவர் 10 பர்வங்களுடன் மொழிபெயர்ப்பை நிறுத்தியதுதான். மேலும் பலர் மஹாபாரதத்தை வெறும் கதை போல் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள் என்னை பொறுத்தவரை இவைகள் சத்தான பழத்தின் சாறு நீக்கபட்ட சக்கைகள் ஆகும். குரு வேத வியாசர் எழுதிய மஹாபாரதத்தில் ஒரு எழுத்தை கூட விட்டுவிட்டு மொழிபெயர்க்கும் உரிமை மனிதர்களாகிய நமக்கு இல்லை, குரு வேத வியாசர் மஹாபாரதத்தை நான்கு வேதத்தின் குறுகிய வடிவமே என்கிறார், அதை சுருக்கி கூறும் அதிகாரம் நமக்கு இல்லை, தமிழில் முழு மஹாபாரதம் புத்தகமாக தராவிட்டாலும் தார்பரிய விளக்கத்தோடு முழு மஹாபாரத சொற்பொழிவு நடத்தும் மகான்களும் உண்டு, குறிப்பாக குரு ப்ரம்ஹஸ்ரீ v. கோபால்ஜீ அவர்கள், குரு வேலுக்குடி கிருக்ஷ்னன் அவர்கள், இச்சான்றோர்களால் முழு மஹாபாரதமும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக கிடைத்தால் என்றும் நம் தமிழ் சமுதாயத்தில் தர்மம் தழைத்தோங்கும். தற்பொழுது கிடைக்கும் மஹாபாரத புத்தகங்களி்ல் என் சிற்றறிவுக்கு எட்டியவரை குரு சோ.ராமசாமி அவர்கள் எழுதிய மஹாபாரதமே சிறந்ததாக தெரிகிறது, சுருக்கமான விளக்கவுரை என்றாலும் கருத்துக்களில் மாற்றமில்லாமல் உள்ளது உள்ளபடி சிறப்பாக தந்திருக்கிறார்.

நான்கு வர்ணம் ( பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரன் ) என்பது நான்கு விதமான தரம் (Four Qualities of Human Beings), இவை நான்கும் ஜாதியையோ அல்லது குலத்தையோ குறிப்பது அல்ல.

வர்ண பிரிவு ஏன்? நம்மை நாம் உணர்ந்துகொள்ள, நம் தகுதியை உயர்த்திகொள்ள உதவும் அளவுகோல் அவ்வளவே. மனிதர்களின் செயல்கள் மற்றும் குணாதிசையங்களை வைத்து அவர்களை நான்கு பிரிவுகளாக தரம் பிரித்திருக்கிறார்கள், உலக மக்கள்அனைவரும், ஆணோ, பெண்ணோ இந்த நான்கு தரத்தில்ஏதோ ஒன்றின் கீழ் இருப்பர், ஐந்தாவதாக ஒன்று இல்லை, நம்மில் பலரும் இதை தவறாக புரிந்துகொன்டு நான்கு ஜாதியாகவோ அல்லது குலமாகவோ நினைக்கின்றோம் அல்லது கற்பிக்கபட்டிருக்கிறோம், பகவத் கீதையில் கண்ணன் ‘நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் – இயல்பின் அடிப்படையில்’ என்கிறான் பிறப்பின் அடிப்படையில் அல்ல, பிறப்பால் அனைவரும் சூத்திரர்கள் தான், வேதம் (தர்மம்) கற்காத வரை ஒருவன சூத்திரனாகவே கருதபடுகிறான், எவரிடம் வேதம் கூறும் உத்தம குணங்கள் இருக்கின்றனவோ அவரே பிராமணன் என்கிறது தர்மம், பிறப்பால்  ஒருவன் பிராமணனாகவோ, சத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரன்னாகவோ ஆகிவிட முடியாது, ஒருவனது செயலினால் அவன் பிராமணனாகவோ, சத்திரியனாகவோ, வைசியனாகவோ, சூத்திரன்னாகவோ அறியபடுகிறான்.


நான்கு வர்ணத்தின் தன்மைகள்  (4 type of attitude)

பிராமணன் – உத்தமமானவன்  ( உலகத்தோர் நன்மையில் நித்திய அக்கரை உள்ளவன்) leaders.

சத்திரியன் – தீரம் மிக்கவன் ( மக்களை ஆட்சி செய்து வழி நடத்துபவன்) Administrators 

வைசியன் – பொருளாதார நிபுணன் ( வியாபாரம் அல்லது  பொருள் தயாரிப்பில் திரன்மிக்கவன்) Businessmen

சூத்திரன் – செயல் வீரன்  ( எத்துறையிலும் இருப்பர், இவர்களுக்கு எப்பொழுதும் தங்களை வழி நடத்த   தலைவன் தேவை ) Executers

 

Tamil Source: http://mahabharatham.arasan.info/2014/06/Mahabharatha-Vanaparva-Section180.html

English Source: http://sacred-texts.com/hin/m03/m03180.htm

Mahabaratham : An encyclopedia of all Dharma (right from how to clean our physical body to intellectual soul)

Most of the people think, the great Mahabaratha is only a holy book of Hindu religion (there was no religion and caste when it was written). It contains total guidelines in the form of story for a perfect life style for all of us and suits all decades, Everything is there, right from how to clean our physical body to intellectual soul. You will not come to know until you read the full version of Mahabaratha, its available in English translated version by Guru Kisari Mohan Ganguli This is available for reading online here: http://www.mahabharataonline.com/translation/ , or just google “kisari mohan ganguli mahabharata pdf”.

 

Tamil Translation of the epic by Guru Arul Selva Perarasan, who has taken up translating Kisri Mohan Ganguli's English translation of Original Mahabharatham, into Tamil. We must thank him for his Great Effort (I know just thanks is not right word to mention here). This is available for reading online here : http://mahabharatham.arasan.info/  for hot copy of full Tamil version translated by Guru M.V.Ramanujachariyar of Kumbakonam it took him to complete the great project almost 25 years, it was published in 1930. Contact Mr.S.Venkataramanan, Sri Chakra Publications. 9/135 Nammalwar street, East tambaram, Chennai. Ph: +91 9894661259  Email : venkat.srichakra6@gmail.com another Tamil version (I’m not sure about it is available in full version) written by Nallapillai in the 19th century, Contact : Edited by R. Srinivasan; Kalaikottam, 12 Puthu Theru, Vinayakapuram, Ambattur, Chennai-600053. 

Article link: http://www.hindu.com/br/2010/08/31/stories/2010083151851800.htm 

 

Widen and clear your mind before you start reading the full version of Guru Veda Vyasar”s Mahabaratam (full version).

மஹாபாரதம், கதை வடிவில் வந்த ஐந்தாம் வேதம்

குரு வேத வியாசர்  நான்கு வேதத்தில் உள்ள அணைத்து தர்மங்களையும் கதை வடிவமாகவும், கதாபத்திரங்களின் உரையாடல் மூலமாகவும் சூழ்நிலைக்கு தக்கவாறு எடுத்துரைத்துள்ளார்.   தர்மம் மிகவும் சூட்சமமானது, அதை பட்டியலிட்டு கொடுப்பதைவிட கதை வடிவில் கொடுப்பதே   அனைத்து மனித சமுதயத்தையும் சென்றாடையும் என்பது அனைத்தும் அறிந்த குரு வேத வியாசரின் திண்ணம்

Mahabharata – Simplified version of 4 Vedas

Mahabharata is not only a story of our god or religious, its simplified version of 4 Vedas, its not easy to understand the exact meaning of Vedas for a common man, Guru Veda Vyasar decided to give us all Dharma sastra in the form of story Mahabaratha for all of us, Each stories contains direct and indirect hidden meanings ( tharpariyam ) we can find what we should do or not at various occasions and situations ( as per Dharma) in our life.

தர்மம் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது …

குரு வேத வியாசர் அவர்களுக்கு வணக்கம்

குரு கோபால் ஜி அவர்களுக்கு வணக்கம், 

குரு வேலுகுடி கிருஷ்னன் அவர்களுக்கு வணக்கம்,

குரு சோ ராமசாமி அவர்களுக்கு வணக்கம்

 

தர்மம் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது …மஹாபாரதத்தில் உள்ள தர்மசாத்திரங்களை ஆராயும் முயற்ச்சி.

 

* மஹாபாரதத்தின் தார்பரிய விளக்கங்கள் 

*மஹாபாரதம் சொல்லும் தர்மங்கள்

*மஹாபாரதம் கதாபாதிரங்களின் பெயர் ஆராய்ச்சி

* மஹாபாரதம் பற்றிய கேள்வி பதில்கள்

 

 

Copyright © 2017 Dharmam.in. All rights reserved
Web Design : NIKITHA